திங்கள், 5 அக்டோபர், 2015

விந்து தம்பனம் செய்ய


விந்து தம்பனம் செய்ய :   


விந்து தம்பனம் என்பது உடலுறவின் போது விந்து வெளியேறாமல் தடுத்து நீண்ட நெடிய தாம்பத்ய சுகத்தை அடைய உதவும் கலையாகும். சித்தர் ஓலைச் சுவடிகளில் இந்த இரகசியங்கள் எழுதப்பட்டு குரு முகமாக பலருக்கும் இவ்வித்தை போதிக்க பட்டது. குரு முகமாக தெரிந்து கொண்டு நீங்களும் செய்து பலன் பெறுவதே சிறப்பாகும்.
         தம்பனத்திற்கு ஏற்ற நாள் புதன்கிழமை, அன்று தனியாக வளர்ந்துள்ள அவுரி செடிக்குகாப்புகட்டி சாபநிவர்த்தி செய்து மேற்கே போகும் வேரை பிடுங்கி தாயத்தில் அடைத்து அரைஞான் கயிற்றில் கட்டிக்கொண்டு  வயிற்று புரம் தாயத்தை இருக்கும்படி செய்து புணர்ந்தால் விந்து விழாது. முதுகு பகுதிக்கு தாய்த்தை இருக்கும்படி செய்து புணர்ந்தால் உடனே விந்து வெளிவரும்.
            செவ்வாய் கிழமை தினம் முசுட்டை செடிக்கு காப்பு கட்டி எலுமிச்சை பலி கொடுத்து மேற்கே போகும் வேரை இரும்பு ஆயுதங்கள் படாமலும், இரு சுண்டு விரல்களும், நகங்கள் பத்தும் படாமல் பிடுங்கி தாயத்தில் அடைத்து கட்ட விந்து தம்பனம் ஆகும்.
        பாவட்டை இலையை பசும்பாலில் அரைத்து சாப்பிட விந்து கட்டும்.
       பூனைக்காலி, குப்பைமேனி, நிலப்பனை கிழங்கு, பூமி சர்கரை கிழங்கு ( சர்கரை வள்ளி கிழங்கு) மூன்றையும் அத்தி மரப்பாலில் அரைத்து சாப்பிட விந்து கட்டும்.
        பச்சை புனுகு, பச்சைகற்பூரம் இரண்டையும் சம எடை எடுத்து புத்து தேனில் அரைத்து ஆண் குறியில் பூசி உடலுறவு கொள்ள விந்து தம்பனமாக்கும்.
        பஞ்சாட்சர எந்திரம் எழுதி நமசிவய என்ற மந்திரத்தை  மாற்றி மாற்றி கட்டத்தில் அடைத்து நமசிவய மந்திரத்தை 1008 உரு ஏற்ற தம்பனம் சித்தியாகும். விந்து தம்பனத்திற்கு தாமிர தகட்டில் எந்திரம் எழுதவும்.வெள்ளை வஸ்திரம் அணியவும். மந்திரம் ஜெபிக்கவும், மூலிகை காப்பு கட்டவும் தென்மேற்கு திசை பார்த்து அமரவும். ஆதாளை கொட்டை எண்ணெயில் தீபம் ஏற்ற விந்து தம்பனம் கைகூடும்


பெண்களை வசியம் செய்ய





                                     பெண்களை வசியம் செய்ய



     சில  குடும்பங்களில் கணவன் - மனைவியிடையே ஒற்றுமையே இருக்காது. ஏனென்றால் நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் எனும்படி கணவன் சொல் கேளாமல், கணவன் வார்த்தைகளை மதியாமல் நடக்கும் மனைவிகள் ஏராளம். இதனால் வாழ்வில் நிம்மதியின்றி தவிக்கும் கணவர்களின் தவிப்பு வர்ணிக்க இயலாது.

       

            விரும்பிய கன்னிகைகளை மயக்கி காதலில் விழ வைக்க ஏங்கி தவிக்கும் காளையர் பலர். அலுவலகங்களில் நமக்கு மேலே உயர் பதவி வகிக்கும் பெண்களால் அடையும் துன்பங்கள் பல...

         

                      இப்படி பிறந்தது முதல் இறக்கும் வரை தாய், தாரம், சகோதரி, உடன் பணிபுரிவோர், உயரதிகாரி, காதலி, நண்பர்கள் என சந்தித்து பழக வேண்டிய சூழல்கள் பல, இதனால் இவர்களால் அடையும் இன்னல்கள் பல..

         

                இச்சூழலில் செல்லும் இடமெல்லாம் எந்த பெண்களை கண்டாலும் அவர்கள் நமக்குவசியப்பட்டால் நமக்கு வேண்டிய உதவிகளை செய்தால் நம் வாழ்க்கை இனிமையாக மாறும். இதற்கு நல்ல வசியம் ஒன்றை சொல்லும்படி வாசகர்கள் கேட்டதால் இதனை விரிவாக சொல்கிற்றேன்.

         

ஆண் - பெண் வசிய விளக்கம் :



1. ஆடை : வசியம் செய்ய வேண்டிய நபர் உபயோகப்படுத்திய ஆடைகளை கொண்டு வசியம் செய்யும் முறை.

2. தலைமுடி : வசியமாக்க வேண்டியவரின் தலைமுடியினை கொண்டு வசியம் செய்யும் முறை.

3.ஐவகை எண்ணெய் : ஐவகை எண்ணையை கொண்டு வசியம் செய்யும் முறை.

4. ஐவகை வேர் : ஐவகை வேர்களை கொண்டு வசியம் செய்யும் முறை.

5.சிறுநீர் : சிறுநீரை கொண்டு வசியம் செய்யும் முறை.


6.தாலிப்பனை ஓலை : தாலிப்பனை ஓலையை கொண்டு வசியம் செய்யும் முறை.

                     ஆண் - பெண் வசியத்தில் இன்னும் பல முறைகள் உள்ளன. இருப்பினும் வாசகர்களின் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக சில முறைகளை மட்டும் இங்கே விளக்கியிருக்கிறேன். இது தவறான முறையில் பயன்பட்டு விட கூடாது என்பதால் தான் இங்குவசிய முறைகளை தெளிவாக எழுதவில்லை.  



சாதாரண மனிதனையும் 

குபேரனாக்கும் மூலிகை வேர்



         சாதாரண மனிதனையும் குபேரனாக்கும் மூலிகை வேர் 




















பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது சான்றோர் வாக்கு. மனித மனம்  மண், பொன், பெண் இந்த மூவசைகளையும் சுற்றியே அலைப்பாய்ந்து வருகிறது. மனித வாழ்வுக்கும் அஸ்திவாரமாக இந்த மூவசைகளே விளங்குகிறது. மனித மனம் செல்வத்தில் அந்தஸ்த்தில் புகழில் மற்றவனை கட்டிலும் நாம் தான் சிறந்து விளங்க வேண்டும் என்று போராடுகிறது. இந்த முயற்சியில் தான் ஒவ்வொரு மனிதனும் போராடி வருகிறான்.

            பிறக்கும் போதே ஒருவன் செல்வ செழிப்பான பெற்றோருக்கு பிறப்பதும், ஏழ்மையில் வாடும் பெற்றோருக்கு பிறப்பதற்கும் காரணம் அவரவர்களின் உழ்வினையே. சரி உழ்வினையை அறுத்து நாமும் செல்வ செழிப்பில் குபேர அந்தஸ்தை அடிய முடியுமா என்று ஒவ்வொரு மனிதனும் பல வழிகளையும் தேடி அலைகிறான். அதற்காக ஜாதகம் பரிகாரம் மந்திரம் எந்திரம் தந்திரம் கோவில் குளம் என்றும் தேடி அலைகிறான். எப்படி எத்தனை காலம் தேடி அலைந்தாலும் அவ்வாறு ஒரு குபேர அந்தஸ்தை யாராலும் அடியமுடியவில்லை.

            சாக வாரத்தை தரும் சஞ்சீவியையே  (சஞ்ஜீவி) நம் சித்தர்கள் கண்டறிந்து நமக்கு வழிகாட்டி இருக்கின்றனர். அந்த சஞ்சீவி மூலிகைகளில் (சஞ்ஜீவி) பல வகைகள் உண்டு. அதில் ஒன்று லக்ஷ்மி குபேர சஞ்சீவி (சஞ்ஜீவி) ஆகும். மனிதன்  வாடையோ காலடியோ படும் இடங்களில் இது வளராது. இத்தகைய ஒரு சஞ்சீவியை நான் அரும்பாடு பட்டு தேடி கண்டுபிடித்து கொண்டுவந்து இன்று சாதாரண மனிதர்கள் பலரை குபேர அந்தஸ்தில் திளைக்க வைத்திருக்கிறேன்.

                இன்று ஒரு வியாபாரத்தை செய்வதனால் லட்சங்கள் கோடிகள் மில்லியன்கள் பில்லியன்கள் என்று முதலீடு செய்து வியாபாரங்களை நடத்தி அதில் வெற்றியை பெற்று குபேர அந்தஸ்தை அடைந்தவர்கள் ஒரு சிலர். வியாபாரத்தில் தோல்வியடைந்து முதலீட்டையும் இழந்து மேலும் கடன் பட்டு காணாமல் போனவர்கள் பல பேர். இந்த அற்புத லட்சுமி குபேர சஞ்சீவி (சஞ்ஜீவி) உங்கள் கைகளில் இருந்தால் போதும் உங்கள் உங்கள் கர்ம வினைகள் யாவும் மாறி உங்கள் ஜாதக தோஷங்கள் யாவும் போகும். உங்களையும் குபேர அந்தஸ்தை பெற வைக்கும். உங்கள் உடலில் உள்ள தீராத நோய்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும். உங்களை கண்டு எதிரிகள் நடுநடுங்கி ஓடுவார்கள். பேய் பிசாசு மோகினி ஏவல் பில்லி சூனியம் கண்திருஷ்டி யாவும் பறந்தோடும். இந்த லக்ஷ்மி குபேர சஞ்சீவி (சஞ்ஜீவி) இருக்கும் இடத்தில் உள்ள வாஸ்து குற்றங்களும் நீங்கும்.

               இந்த அற்புத லக்ஷ்மி குபேர சஞ்சீவி (சஞ்ஜீவி) மூலிகை சித்தர்களால்  பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வந்த அறிய மூலிகையாகும் . இந்த அறிய மூலிகை உங்களுக்கு கிடைக்கவே நீங்கள் பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும். இம்மூலிகை குரு - சிஷ்ய பாரம்பரிய வழியாக மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்பட்ட ஒன்றாகும்.

                இந்த அற்புத லக்ஷ்மி குபேர சஞ்சீவி (சஞ்ஜீவி) மூலம் நீங்களும் குபேர அந்தஸ்து பெற்று உங்கள் வாழ்வு வளம்பெற, பணம், பதவி, அந்தஸ்து, பட்டம், புகழ் பெற்று நீங்கள் வெற்றியுடன் வாழ இன்றே தொடர்பு கொள்வீர். 




அஷ்டகர்ம மூலிகைகள் அறுபத்தி நான்கு



         பண்டைய காலத்தில் வாழ்ந்து பல அற்புதங்களை செய்த நம் தமிழக சித்தர்கள்மூலிகைகளை கொண்டே மந்திர உருவேற்றி பல காரியங்களில் வெற்றியடைந்தனர். அதன்படி அவர்கள் பயன்படுத்திய மூலிகைகள் அஷ்டகர்மங்கள் எட்டு சித்திகள் )  செய்ய ஒரு சித்திக்கு 8மூலிகை என அஷ்ட சித்திக்கு 64 மூலிகைகள் ஆகும். அஷ்டகர்மம் என்பது 1. ஆகர்ஷனம், 2.உச்சாடனம், 3. தம்பனம், 4. பேதனம், 5. மாரணம், 6. மோகனம், 7. வசியம், 8. வித்வேஷனம்ஆகும். இந்த அஷ்ட கர்ம செயல்களை பற்றி விரிவாக காணலாம்.
          


1. ஆகர்ஷனம் 

                         நமக்கு தேவையானதை இருக்கும் இடத்திலிருந்து நாம் இருக்கும் இடத்திற்கே வரவழைக்கும் வித்தையாகும். இதற்கு உதவும் மூலிகைகள் 1. வேளை, 2. உள்ளொட்டி, 3.புறவொட்டி, 4.சிறு முன்னை, 5. குப்பைமேனி, 6. அழுகண்ணி, 7. சிறியாநங்கை, 8. எருக்கு என எட்டு மூலிகைகளாகும். இதில்
                 
                 மிருகங்களை அழைப்பதற்கு - வேளை, குப்பைமேனி.
                 பெண்களை அழப்பதற்கு -  உள்ளொட்டி, அழுகண்ணி.
                 அரசர், பிரபுக்ளை அழைப்பதற்கு - சிறுமுன்னை.
                 துர்தேவதைகளை அழைப்பதற்கு - புறவொட்டி.
                 தேவதைகளை அழைப்பதற்கு - எருக்கு.
                 அனைத்து அழைப்பிற்கும் - சிறியாநங்கை.

 2. உச்சாடனம் 

                               பேய், பிசாசு, கெட்ட ஆவிகள், நோய்கள் தீமைகளை விரட்டியடித்தல். இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. பேய் மிரட்டி,  2. மான் செவிகள்ளி, 3. தேள்கொடுக்கி, 4.கொட்டைகரந்தை, 5. வெள்ளை கண்டங்கத்திரி, 6. மருதோன்றி, 7. பிரமதண்டு, 8. புல்லுருவிஆகும். இதில்
                  
                 மிருகங்களை விரட்ட - பேய்மிரட்டி.
                 எதிரிகளை விரட்ட - மான்செவிகள்ளி.
                 உடலில் ஏறிய விஷங்களை விரட்ட - தேள்கொடுக்கி.
                  நீர்வாழ் உயிரனங்களை விரட்ட - கொட்டைகரந்தை.
                 கால்நடைகளை விரட்ட - வெள்ளை கண்டங்கத்தரி.
                 பூத பைசாசங்களை விரட்ட - மருதோன்றி, புல்லுருவி
                 பிறர் நமக்கு செய்யும் தீமகளை விரட்ட - பிரமதண்டு.

 3. பேதனம் 

                                ஒன்றை மற்றொன்றாக மாற்றுதல், அதாவது  ஒரு விஷயத்தை நினைத்து நம்மிடம் வருபவரை அந்த நினைப்பை வேறுபட்டு போகும்படி செய்தல். இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. வட்டதுத்தி, 2. செம்பசளை, 3. மாவிலங்கு, 4. பாதிரி, 5. கோழியாவரை, 6.சீந்தில்கொடி, 7. புடலங்கொடி, 8. ஆகாயதாமரை ஆகும்.
                    
                     நெருப்பின் உக்கிரத்தை பேதிக்க - வட்டதுத்தி,
                     மனிதனின் எண்ணத்தை பேதிக்க - செம்பசளை,
                     பூத, பிசாசுகளை பேதிக்க - மாவிலங்கு, பாதிரி,
                    துர்தேவதைகளை பேதிக்க - கோழியாவரை,
                    எதிரிகளை பேதிக்க - சீந்தில்கொடி,
                    பெண்களை பேதிக்க - புடலங்கொடி,
                     வியாதிகளை பேதிக்க - ஆகாயதாமரை.
   

 4. மாரணம்  

                             கொல்வது அல்லது மாற்றுவது. உலோகங்களை அதன் தன்மையில் இருந்து மாற்றுவது. எதிரிகளுக்கு நோயை உண்டாக்கி கொல்வது. இதற்கு  பயன்படும்  மூலிகைகள் 1.நச்சுப்புல், 2. நிர்விஷம், 3. சித்திரமூலம், 4. அம்மன் பச்சரிசி, 5. கார்த்திகை கிழங்கு, 6.மருதோன்றி, 7. கருஞ்சூரி, 8. நாவி  ஆகும்.
                    
                  மனிதர்களை மாரணம் செய்ய - நச்சுப்புல், நிர்விஷம்,
                  வியாதிகளை மாரணம் செய்ய  - சித்திரமூலம், கருஞ்சூரை,
                  கண்ணாடிகளை மாற்ற - அம்மன் பச்சரிசி,
                  மிருகங்களை  மாரணம் செய்ய - மருதோன்றி, கார்திகை கிழங்கு.

  5. மோகனம் : 

                                      பிறரை நம்மிடம் மயங்கி இருக்க செய்வது. இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. பொன்னூமத்தை, 2. கஞ்சா வேர், 3. வெண்ணூமத்தை, 4. கோரைக்கிழங்கு, 5.மருளூமத்தை, 6. ஆலமர விழுது, 7. நன்னாரி, 8. கிராம்பு ஆகும்.
                     
                    பெண்களை மோகிக்க  - பொன்னூமத்தை,
                     பொதுமக்களை மோகிக்க - கஞ்சா வேர்,
                     உலகத்தை மோகிக்க - வெண்ணூமத்தை,
                     விலங்குகளை மோகிக்க - கோரைக்கிழங்கு, 
                     தேவதைகளை மோகிக்க - மருளூமத்தை,
                     அரசர்களை மோகிக்க -  ஆலம்விழுது,
                      மனிதர்களை மோகிக்க  -  கிராம்பு,
                      எல்லாவற்றையும் மோகிக்க - நன்னாரி.

 6. வசியம் 

                                   எல்லாவற்றையும் நம்மிடம் விருப்பமாகவும்  இஷ்டமாயும் இருக்க வைத்தல். இதற்கு பயன்படு்ம் மூலிகைகள் 1. சீதேவிச் செங்கழுநீர், 2.  நிலவூமத்தை, 3. வெள்ளை விஷ்ணுகிரந்தி, 4. கருஞ்செம்பை, 5. வெள்ளை குன்றி மணி, 6. பொன்ணாங்கன்னி, 7.செந்நாயுருவி, 8. வெள்ளெருக்கு ஆகும்.
                       இராஜ வசியத்திற்கு - சீதேவி செங்கழுநீர்,
                       பெண் வசியத்திற்கு - நிலவூமத்தை,
                       லோக வசியத்திற்கு - வெள்ளெருக்கு,
                        ஜன வசியத்திற்கு - கருஞ்செம்பை, விஷ்ணுகிராந்தி,
                        விலங்கு வசியத்திற்கு - வெள்ளை குன்றி மணி,
                        தேவ வசியத்திற்கு - பொனணாங்கன்னி,
                         சாபம், வழக்குகள் வசியத்திற்கு - செந்நாயுருவி.

 7. வித்துவேஷனம் 

                                                    பகையை உண்டாக்குதல். இதற்கு பயன்படும் மூலிகைகள். 1. கருங்காக்கனம், 2. வெள்ளை காக்கனம், 3. திருகு கள்ளி, 4. ஆடுதின்னாபாளை, 5. பூனைக்காலி, 6. கீழாநெல்லி, 7. ஏறண்டம், 8. சிற்றாமணக்கு ஆகும்.
                        
                       அரசர்களுக்குள் பகை உண்டாக்க - கருங்காக்கணம்,
                        தேவர்களுக்கு - வெள்ளைக்காக்கணம், திருகுகள்ளி,
                        பூத, பைசாசங்களுக்கு - ஆடுதின்னாபாளை,
                        பெண்களுக்கு நோய் உண்டாக்க  -  பூனைக்காலி,
                        எதிரிகளால் உண்டாகும்  ஆபத்தை  தடுக்க - கீழாநெல்லி,
                        உணவை உண்ணாமல் செய்ய - சிற்றாமணக்கு.

 8.  தம்பனம் : 

                                            தடுத்து நிறுத்துத்தல்,  விலங்குகளின் வாயை கட்டுதல். இதற்க்கு  பயன்படும் மூலிகைகள் 1.  கட்டுக்கொடி, 2.  பால்புரண்டி, 3.  பரட்டை, 4. நீர்முள்ளி, 5.நத்தைச்சூரி, 6.  சத்தி சாரணை, 7. பூமிச்சர்கரை,  8. குதிரைவாலி  ஆகும்.
                        
                        விந்துவை  கட்ட - கட்டுக்கொடி, பால்புரண்டி, நீர்முள்ளி,
                        தண்ணீரைக்கட்டி அதன் மேல் அமர  - கட்டுக்கொடி,
                        பெண்களின் முலைபாலை கட்ட - பால்புரண்டி,
                        வயிற்றுப் போக்கை நிறுத்த  - பரட்டை,
                        கற்களை கறைக்க - நத்தைச்சூரி,
                        செயல்களை செயல்படாமல் கட்ட - சத்திசாரணை,
                         திரவத்தை கட்டி திடமாக்க  - பூமிச்சர்கரை கிழங்கு,
                         கருப்பையில் உள்ள கருவை கட்ட - குதிரைவாலி.
       
                   மேற்படி மூலிகைகளை உரிய நாளில் காப்பு கட்டி, சாபநிவர்த்தி மந்திரம் சொல்லி பிடுங்கி வந்து உரிய மந்திர உருவேற்றி மேற்பட்ட அஷ்டகர்ம செயல்களை  செய்ய அனைத்தும் ஜெயமாகும்.




மூல நோயிக்கு அற்புத மருந்து





                                                                   மூல நோய்

                    மனிதனுக்கு உண்டாகக் கூடிய பலவகையான நோய்களில் மூல நோய் ஒன்றாகும். சரியாக சிகிச்சை மேற்கொள்ளாமல் விடப்படும்  மூல நோய் - புற்று நோயாக மாறும் வாய்ப்புகள் அதிகம். ஆசன வாய் பகுதியில் உள்ள இரத்தக் குழாய்கள் தடிமன் ஆவது தான் மூல நோய்.


 மூல நோய் - அறிகுறிகள் :


1. ஆசன வாயில் ( மலம் வெளியேறும் பாதையில் ) அரிப்பு உண்டாகுதல்.
2. மலசிக்கல் ஏற்படுதல், மலத்துடன் இரத்தம் கலந்து வெளியேறுதல்,
3. ஆசனவாயில் தொடர்ந்து உண்டாகும் வலி, எரிச்சல், அரிப்பு.
4.ஆசன வாயின் உள்பகுதி வீங்கி, மலம் கழிக்க சிரமப்படுதல் (உள் மூலம்).
5. ஆசன வாயின் வெளிப்பகுதியில் முளை போல் சதை வீங்கி தள்ளி உட்கார, படுக்க, மலம் கழிக்க முடியாத அளவுக்கு வலி, வேதனை சிரமத்தை உண்டாக்குதல். ( இதுவே வெளி மூலம் ஆகும் ).
6. மலவாய் எரிச்சல், விந்து கெடுதல், வயிற்று இரைச்சல், வயிறு நொந்து மலம் கழிதல், பசியின்மை, புளி ஏப்பம், நீர் வேட்கை, உடல் மெலிதல், உடல் பலம் குறைதல்,
7. மூல நோயானது மன ரீதியாகவும் பாதிப்படைய செய்யும், மனம் தளரும், நம்மை எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ள செய்யும்.

மூல நோய் - உண்டாக காரணங்கள் :


1. தொடர்ந்து உண்டாகும் மலசிக்கல்,

2. உடல் எடை ( தொந்தி ) யால் ஏற்படும் வயிற்று அழுத்தம்,
3. பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கரு வளர்ச்சியால் உண்டாகும் வயிற்று அழுத்தம்,
4. பரம்பரை மற்றும் அதிக உடல் உஷ்ணம்,
5. கிழங்கு வகைகள் ( கருணை கிழங்கு தவிர ), மாமிச உணவுகள், உணவில் அதிகப்படியான காரம் சேர்த்து உண்பதாலும்,
6. தொடர்ந்து உட்கார்ந்தபடி வேலை செய்பவர்களுக்கு, 
7. வேளைக்கு உணவு உட்கொள்ளாமல் ( பட்டினி ) இருப்பதால் மூலாதாரத்தில் வெப்பம் அதிகமாவதால்,


                 இன்றைய ஆங்கில மருத்துவத்தில் மூல நோயிக்கு அறுவை சிகிச்சை (ஆபரேசன் ) ஒன்று தான் தீர்வாக உள்ளது, அப்படியே அறுவை சிகிச்சை செய்து கொண்டாலும் மீண்டும் மீண்டும் மூல நோய் வந்து நம்மை தீராத துன்பத்தில் ஆழ்த்துகிறது என்பதே உண்மை, இந்த முறையில் அறுவை சிகிச்சை ஒரு முறை செய்ய ஆகும் செலவு ஏறத்தாழ ரூபாய் 15000 முதல் 20000 வரை. நிரந்தரமாக குணப்படுத்த முடியாத சிகிச்சைக்கு இப்படி செலவு செய்ய வேண்டுமா சற்றே சிந்தியுங்கள்...


                   

நமது கிராமங்கள் தோறும் விளைந்துகிடக்கும் தொட்டற்சினுங்கி மூலிகையை நாம் அனைவரும் அறிவோம். இந்த தொட்டற்சினுங்கி இலையை ஒரு கைப்பிடி அளவு காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் தொடர்ந்து  பத்து நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூல நோய் இருந்த இடம் தெரியாமல் பறந்தோடும் மீண்டும் வராது. 

சாப்பிடும் முறை :

                                   காலை - வெறும்வயிற்றில்,
                                   மதியம்  - உணவுக்கு பின்,
                                   இரவு - உணவுக்கு பின்.                                                                  பத்தியம் - அசைவ உணவுகள்.





வசிய திலகம் - செய்முறை



வசிய திலகம் - செய்முறை :

வசிய திலகம் செய்ய ஏரழிஞ்சல் விதையை கற்பூரம் சேர்த்து அரைத்து பீங்கான் ஜாடியில் போட்டு சூரிய ஒளியில் வைத்தால்  அதிலிருந்து தைலம் இறங்கும் (வசிய திலகம்அதை எடுத்து தாமிர டப்பாவில் பத்திரப்படுத்தி வைத்து கொள்ளவும். பின் ஞாயற்றுக்கிழமை அன்று  ஒரு பலகையின்  மீது சிவப்பு பட்டு துணி விரித்து அதன் மேல் வசிய திலகம் உள்ள தாமிர டப்பாவை வைத்து காரம்பசு (கருப்பு நிற பசு) நெய்யில் தாமரை நூல் திரிபேட்டு தீபம் ஏற்றி கிழக்கு திசை நோக்கி அமர்ந்துகொண்டு "ஓம் ஆம் ஜெய ஜெய வா வா அவ்வும் உவ்வும் வசிய வசிய சுவாஹா" என்ற வசிய  மந்திரத்தை 1008 ஜெபம் செய்து, "யநமசிவ" என்ற மந்திரம் 1008 உரு சொல்ல மேற்படி தைலம் (வசிய திலகம்வசியமாகும்.  அதன்பின் வசிய திலகம் இட்டு செல்ல சகல விதமான காரியங்களும் கைகூடும்.



நீண்ட நேர உடலுறவு சக்தி தரும் அற்புத மாத்திரை


நீண்ட நேர உடலுறவு சக்தி தரும் அற்புத மாத்திரை :

        

              இன்றைய காலகட்டத்தில் மாறிவரும் உணவுப் பழக்கங்களாலும், பழக்கவழக்கங்களாலும் ஆண் பெண் இருவருக்குமே உடலுறவு சக்தி என்பது குறைந்து கொண்டே வருகின்றது. நாம் உண்ணும் உணவில் போதிய சத்துக்கள் நமக்கு கிடைப்பதில்லை. அதுமட்டுமின்றி இன்றைய நவீன உலகின் சூழல் அதாவது பண்டைய காலங்கள் போல் இல்லாமல் மிக வேகமான அவசர இயந்திர வாழ்க்கை அதனால் உண்டாகும் மன நிம்மதி அற்ற சூழல் போன்ற காரணங்களால் இன்றைய ஆண் பெண் இருவருக்குமே உடலுறவு சக்தி குறைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

          இந்த சூழலில் பல ஆடவர்கள் ஆங்கில மருந்துகளை நாடி சென்று மேலும் மேலும் தங்களுடைய உடலுறவு சக்தியை குறைத்துக்கொண்டு பின் வருத்தப்படுவதும் நடைபெற்று வருகிறது. இன்றைய பெண்களின் நிலைதான் என்ன சீரற்ற மாதவிடாய்கர்பப்பை கோளறு என்று சொல்வது வாடிக்கையாகி விட்டது. முன் காலங்களில் பெண்கள் எட்டு ஒன்பது குழந்தைகளை இயல்பாக பெற்ற நிலை மாறி இன்று ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள படாத பாடு படுகின்றனர் என்பதும் நாம் மறுக்க முடியாத உண்மை. இந்நிலை மாற வேண்டும் நம் சமுதாயம் மீண்டும் ஒரு நிம்மதியான குடும்ப வாழ்வினை அனுபவிக்க வேண்டும் என்ற சீரிய நோக்கில் நம் சித்தர்கள் அருளிய சித்த மருத்துவத்தின் துணை கொண்டு நமது சர்வ சக்தி விருட்ச பீட - ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகளின் அற்புத படைப்பு - நீண்ட நேர உடலுறவு சக்தி தரும் அற்புத மாத்திரை - இந்த மாத்திரை எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படுத்தாது, ஆண் பெண் பேதமின்றி அனைவரும் சாப்பிடலாம், இதில் 15 வகையான மூலிகைகள் சேர்த்து செய்யப்படுகிறது, இதில் சில மூலிகைகளை பற்றி உங்களின் நன்மைக்காக இங்கே குறிப்பிடுகிறேன்.

அதிமதுரம் :
                           ஆண் பெண் மலடு நீக்கும் ஒரு மா மருந்து அதிமதுரம். குழந்தை பேறு இன்மையை நீக்கும் மா மருந்து. மனிதர்களுக்கு தீங்கினை விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் வல்லமை கொண்டது. தாது விருத்தியை உண்டாக்கும்போக சக்தியை அதிகரிக்கும். தீய பழக்கங்களால் உடலில் இழந்த போக சக்தியை மீட்டு தரும். பெண்களின் கர்ப்பப்பை நோய்களை நீக்கும். சிறுநீரில் உண்டாகும் உதிர போக்கை நீக்கும், சிறுநீர் பையில் உள்ள புண்களை ஆற்றும்.சொட்டு மூத்திரத்தை குணப்படுத்தும்.

ஓரிதழ் தாமரை :
                                     உறக்கத்தில் விந்து வெளியேறுதல்உடலுறவில் நாட்டம் இல்லாமை,சிறுநீரில் விந்து வெளியேறுதல், உடலில் ஏற்படும் தாது நஷ்டம் போக்கி தாதுவை உண்டாக்கும், தனிமேகத்தை தொலைக்கும், மேனிக்கு அழகு தரும்.

கடுக்காய் :
                      கடுக்காய்க்கு அமுதம் என்று ஒரு பெயருண்டு, தேவர்களின் அமுததிற்கு ஒப்பானது கடுக்காய், துவர்ப்பு சுவை உடையது, துவர்ப்புச் சுவையே இரத்தத்தை விருத்தி செய்வதாகும். கடுக்காய் இரத்த விருத்தியை உண்டாக்கி உடல் உள் உறுப்புகளில் உண்டான இரணங்களை(புண்களை) ஆற்றி, தோல் நோய்களை நீக்கி, உடல் உஷ்ணத்தை போக்கி, வெள்ளைப்படுதலை நீக்கும்உடல் பலவீனத்தை போக்கிஆண்களின் உயிரணு குறைபாடுகளை நீக்கிஇளமை தோற்றத்தையும் உண்டாக்கும்.

ஜாதிக்காய் :
                          நேச்சுரல் வயாகரா என்று அழைக்கப்படும் ஜாதிக்காய் காமத்தை பெருக்கும், விந்து உற்பத்தியை அதிகரிக்கும், ஆண்மை குறைவை போக்கும், நரம்பு தளர்ச்சியை போக்கும், நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும், நீர்த்துப் போன விந்தினை கெட்டிப்படுத்தும், விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும், விந்து முந்துதலை தடுத்து நீண்ட நேர உடலுறவுக்கு துணைப்புரியும்.

         இத்தகைய அபூர்வ சக்திகளை தன்னகத்தே கொண்ட அற்புத மூலிகைகள் பதினைந்தினை கொண்டு உருவாக்கப்பட்டது தான் - நீண்ட நேர உடலுறவு சக்தி தரும் அற்புத மாத்திரை, இதனை ஆண் பெண் பேதமின்றி அனைவரும் உண்ணலாம், சீர்கேடான நம் உடலை சீராக்கி, நம் உடலில் புதிய இரத்த விருத்தியை உண்டாக்கி, நமது நரம்பு மண்டலங்களை வலுப்படுத்தி, விந்துவில் உயிரணுக்களின் உற்பத்தியை தோற்றுவித்து, விந்துவை கெட்டிப்படுத்தி நீண்ட நேர உடலுறவுக்கு சக்தி தருவது - நீண்ட நேர உடலுறவு சக்தி தரும் அற்புத மாத்திரை. இந்த மாத்திரையை காலையில் வெறும் வயிற்றில் இரண்டும், இரவு படுக்கைக்கு செல்லும்போது இரண்டும் பாலுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட மொத்தம் 196 மாத்திரைகள் கொண்ட ஒரு செட்டின் விலை ரூபாய் 1,550 ( தபால் செலவு உட்பட)., இது முழுக்க முழுக்க பின் விளைவுகளை உண்டாக்காத மூலிகை மருந்தாகும்.


நீண்ட நேர உடலுறவு சக்தி தரும் அற்புத மாத்திரை பெற 




அற்புத வசிய மூலிகை அழுகண்ணி தொழுகண்ணி


     அழுகண்ணி மூலிகைக்கு வடமொழியில் சாவல்யகரணி என்றும் தொழுகண்ணிக்கு சல்லிய கரணிஎன்றும் பெயர் இம்மூலிகைகள் இரண்டும் காயகற்ப மூலிகைகள் ஆகும். மிகப்பெரியதொரு வசிய மூலிகைகள் உண்டு என்று சொன்னால் அவை அழுகண்ணி மற்றும் தொழுகண்ணி ஆகும்.

        அழுகண்ணி ஒரு அடி நீளம் வளரும் ஒரு குத்து செடியாகும்.இதன் இலை தடிமனாகவும் வழுவழுப்பாக கடலை இலையினை போல் இருக்கும். இந்த இலையின் நுனியில் இருந்து பனித்துளி போல் நீர் கசிந்து பூமியில் கொட்டும், எனவே இந்த செடிக்கு அடியில் பூமியில் இரப்பதம் இருக்கும். இந்த நீர் இனிப்பு சுவை உடையதால் எப்போதும் எறும்பு மொய்துக்கொண்டே இருக்கும். இது ஒரு ஜீவ சக்தி உடைய மூலிகை, இதனை முறைப்படி காப்பு கட்டி சாபம் நீக்கி இந்த மூலிகையை எடுத்து உபயோகப்படுத்த வேண்டும். அழுகண்ணியின்வடக்கு போகும் வேரை எடுத்து தங்கம் அல்லது வெள்ளியில் காப்பு அல்லது தாயத்து செய்து அதனுள் வேரை வைத்து வலது கரத்தில் அணிந்து கொண்டால் சகல காரியங்களும் வெற்றியாகும்,லக்ஷ்மி தேவி நமக்கு வசியமாகி லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்தொழில் வியாபாரங்களில் மிகப் பெரிய முன்னேற்றம் உண்டாகும்.

            தொழுகண்ணி இலை பார்ப்பதற்கு சனப்ப இலை போல இருக்கும், இதை தொட்ட உடன் பக்க இலையுடன் இலை சேர்ந்து கைகூப்புவது போல் இருக்கும், ஒரு முழ நீளம் வரை வளரும், அந்தி மல்லி செடியின் தோற்றத்தை ஒத்து இருக்கும். தொழுகண்ணியின் வடக்கே போகும் வேரை எடுத்து தங்கம் அல்லது வெள்ளியில் காப்பு அல்லது தாயத்து செய்து அதனுள் வேரை வைத்து வலது கரத்தில் அணிந்து கொண்டால் சகல ஜன வசியம், சகல காரிய வெற்றி, குபேர அந்தஸ்து லக்ஷ்மி கடாட்சம் உண்டாக்கும்.

     இவ்விரு காயகற்ப மூலிகைகளை முறைப்படி உண்டுவந்தால் உடலில் வெட்டுப்பட்ட பாகங்களை உடனே இணைக்கும் என்று சித்தர் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

                  வியாபாரத்தில் செல்வம் கொழிக்க வைக்கும் வாலை சக்கரம்
         இன்றைய கால கட்டத்தில் வியாபாரம் செய்வது என்பது மிகவும் கடுமையான ஒரு செயல் ஆகிவிட்டது. ஒன்று பல போட்டியாளர்களும், அந்த வியாபார போட்டியல் வாடிக்கையாளர்களை கவர விலை குறைப்பும், பல சலுகைகளும் பரிசுப்பொருட்களை வாடிக்கையளர்களுக்கு அள்ளி வழங்குவதும் போன்ற காரணங்களாலும், செய்யும் வியாபாரங்களில் நல்ல லாபத்தினை நாம் அடைவது என்பது சாத்தியமில்லை. மேலும் நமது ஜாதகங்களில் உள்ள தோஷங்களும், கிரகங்களின் கோட்சாரமும், திசை - புத்தியால் நமக்கு உண்டாகும் பலன்களும் அதாவது நமது கர்மவினை பலன்களும் நம்மை நாம் செய்யும் வியாபாரத்தில்  பெரும் இலாபத்தினை வெற்றிகளை வளர்ச்சியினை பாதிக்கும் அம்சங்களாக விளங்குகின்றன.

       சரி இந்த நிலை மாற நாம் தெய்வ அருளினை தான் நாட வேண்டி இருக்கிறது, நாம் நேரடியாக தெய்வ அருளினை பெறுவது இயலாத காரியம் என்பதை அறிந்த முன்னோர்களும் சித்தர்களும் நாமும் வளமுடன் வாழ என்ற நோக்கிலேயே அருளி சென்றவை தான் எந்திரங்களும் அதற்க்கு உண்டான மந்திரங்களும் அதற்கென உடன் வைக்கும் வசிய மூலிகைகளும் ஆகும். அவ்வகையில் வியாபாரிகள் வியாபாரங்களில் வெற்றி மேல் வெற்றி அடையவும்செல்வங்கள் அடையவும், வாடிக்கையாளர்கள் பெருகவும் சொல்லி சென்ற எந்திரமே "வியாபாரத்தில் செல்வம் கொழிக்க வைக்கும் வாலை சக்கரம்" ஆகும். இந்த எந்திரத்துடன் மஹா லக்ஷ்மி தனாகர்சன சக்கரம் வரைந்து அத்துடன் அழுகண்ணிதொழுகண்ணி வேர்களை இணைத்துகட்டி தகுந்த மந்திர உரு ஒருலட்சம் ஏற்றி நம் கையில் அணிந்தால் மேற்கண்ட நற்பலன்கள் அனைத்தும் அடைந்து வாழலாம்.



புத்திர பாக்கியம் தரும் விருட்சம்



புத்திர பாக்கியம் வேண்டி ஏங்கி தவிக்கும் தம்பதியினர் பலர், இவர்களின் புத்திர பாக்கிய வேண்டுதலை உடனே நிறைவேற்றும் ஒரு பரிகார மரம் ஒன்று உண்டு என்று விருட்ச சாஸ்திரம் கூறுகிறது. இம்மரம் நமது சர்வ சக்தி விருட்ச பீடத்திலும் நட்டு சாஸ்திர முறைப்படி வளர்க்கப்பட்டும் வருகிறது. உலக மக்களின் புத்திர பாக்ய வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக புத்திர தோஷ பரிகார பூஜைகள்  நடத்தப்பட்டு வருகிறது. அந்த அபூர்வ சக்தி கொண்ட தெய்வீக விருட்சம் இலந்தை மரம் எனும் முட்கள் நிறைந்த சிறு மரம். இம்மரத்தில் சந்தான கணபதியும், மகாலட்சுமியும் ஒருங்கே வாசம் செய்வதால் இம்மரத்தை வணங்கும் போது புத்திரபாக்கியத்தில் உண்டாகும் வினைகளை விநாயகர் தீர்த்து அருள, லட்சுமியும் தனது அம்சங்களை பிறக்கும் குழந்தைகளுக்கு உண்டாக அருள்பாலிக்கிறார்.




இந்த மரத்தினை அதிகாலையில் சந்தன லட்சுமி மந்திரத்தை 16 முறை சொல்லி வலம்வந்து, அதன் இலைகளை ஒரு கைப்பிடி அளவு பறித்து அத்துடன் 10 மிளகு சேர்த்து அரைத்து, பெண்கள் மாத விலக்கான மூன்று நாட்களும் சாப்பிட கருவறையை சுத்தப்படுத்தி கரு உண்டாக செய்கிறது.







ஆல மரம் :
இந்த தெய்வீக சக்தி உடைய விருட்சம் சிவ பெருமானின் அம்சம் ஆகும். இந்த மரத்தில் இருந்து சாத்வீக கந்த அதிர்வுகள் வேளியறுகின்றன. இந்த விருட்சத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதில் கைகூடும். இந்த விருட்சம் ஆண்மையை அதிகரிக்க செய்யும். குழந்தை பாக்கியம் இல்லாத ஆண்கள் இம்மரத்தை முறைப்படி பூஜித்து வணங்கினால் புத்திரபாக்கியம் உடனே கிடைக்கும். கணவன் - மனைவி சேர்ந்து இந்த பரிகாரத்தை செய்யவும்.


ஒரு வியாழக்கிழமையை தேர்வு செய்து அன்று சர்வ சக்தி விருட்ச பீடத்தில் உள்ள ஆல விருட்சதிக்கு புத்திர தோஷ பரிகாரம் செய்யவும் . பரிகாரம் செய்வதற்கு முதல் நாள் இரவே நவ தானியத்தை வாங்கி தண்ணீரில் ஊறவைத்து பரிகாரம் செய்யும் நாள் ஊறவைத்த தண்ணீரை விருட்சதிக்கு ஊற்றி பரிகாரம் செய்து கொண்டு, ஊறவைத்த தானியத்தை வெல்லம் சேர்த்து அரைத்து பசுவுக்கு கோபூஜை செய்து உண்ண கொடுத்தல் உங்கள் கர்ம விணைகள் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாகும். இம்மரம் வெளியிடும் காந்த அலைகள் உடலுக்கு நல்ல வலிமை தரும். இம்மரம் வெளியிடும் கற்றை சுவாசம் செய்தாலே உடல் நோய்கள் நீங்கும்.

3 கருத்துகள்:

  1. மிகவும் அருமையான தகவல் . மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  2. இந்த அத்தனை பதிவுகளும் சர்வ சக்தி விருட்ச பீடம் இணைய தளமான www.tamiloccultscience.blogspot.com இணைய தளத்திலிருந்து அச்சு பிசகாமல் காப்பி பேஸ்ட் செய்யப்பட்டது...

    பதிலளிநீக்கு